|
அடிவானம் எதுவரையில்? அதுவரையில் சென்று அறிந்துணர வேண்டும்நான் அலைகடலின் மீதேறி
அலை நீளம் அளக்க முனைந்தேன்
முன்சீறும் ஓரலை காணும் முன்னே தூரத்தில் நீரலை மற்றொன்று என்னோடு சமாதானம் பேசும் வெள்ளை கொடியேந்தி, அதற்குள் ஈரலைகள் இங்கே கரையிறங்கி மீண்டும் கடலோடு கலந்திருக்கும்;
தனியே.., விரல் மீனாய்த் தோன்றி விளாங்காய் வளர்ந்து திமிங்கிலமாய் கரைகடிக்கும் குழந்தை அலைகள் சில
|