துயில் களைதல் எழும் வரையே தூக்கம் கலக்கும் எழுந்திடின் மயக்கம் மறையும் அதிகாலை தூக்கம் - அசைவுக்கும் இசையா! அத்துணை பொல்லாதது உதறி எழுவது சுலபமல்ல மாறி, கடினமும் அல்லவே! அயரும் முன்னமே உதயம் விதைப்போம் அறுவடை எடுப்போம்