|
விட்டமின்றி வட்டமடிப்பேன் விடுபடு திசைவேகத்தில் விண்ணை நோக்கி
உழைப்பை சிந்தி வை உற்பத்தி வியர்வை தானெனினும் உறக்கமாவது கிட்டும்.
நிதர்சனம் மீறிய நினைவுகள் என்றாகிலும் நிறைவேற வேண்டுமெனில் சங்கடங்கள் இன்றே சந்தித்தாகப்பட வேண்டும் இனி- சாற்றப்பட்ட கதவுகளின் தாழ் நீக்கததிற்கு கால் கடுக்க அவசியமில்லை துருப்பிடித்த அக் கதவுகள் எக்காலத்திற்கும் தேவையில்லை வசந்தத்திற்கு வழிவிடும் வாயில்களை நீ அமைத்தது சாவிக் கொத்தை உன் வசமாக்கு
|