Entry: My Society Friday, January 13, 2006



கம்புகொண்டு நடக்கிறான் கயிற்றின்மேல் 
விழாது இருக்க... 
வயிற்றின்மேல் ஈரத்துணி 


கருவறையோ, 
கல்லறையோ 
என்ன வித்தியாசம் காணும் 
கருவிலேயே உரு தெரியாமல் 
கருகிப்போகும் பட்டிக்காட்டுப் 
பெண் சிசு? 


சுகப்பிரசவத்தில் 
ஊனமாய் 
பிறந்த குழந்தை

 

மூலவர் 
உட்பிரகாரம், உள்ளே 
கம்பீரமாய் அமர்ந்திருந்தார் 
அன்றைய உபயதாரர்

   0 comments

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments