அமைந்த அனைத்து வகை ஆதாரங்களிலுமிருந்த ;ும் நீர்மூலத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, ஆதியில் காற்று மாசுக்கள் சிலவற்றோடு கலந்தே வாயு மண்டலத்தில் அலைந்தாலும், சிறுக சிறுக நீராவி துகள்களை சேர்த்துக்கொண்டும் ;, மலை சிகரங்களோடு சிநேகிதம் பாராட்டி கொண்டும் பெருந்திரளாய் மாறி காலம் கனியும் வரையில், பயணப்பகுதியில் தன்னளவில் நிழல் பரப்பியும், தன் களைப்பு களைய, காண்பவர் கண்கள் மகிழ தோற்றத்தில் வேற்றுமை காட்டிக்கொண்டே, கூடி வந்த வேளையில் கடந்து செல்லுமிடம் எதுவாக இருந்தாலும் பாரபட்சம் பாராமல் தானே நிர்மூலமாகி எல்லாம் தழைக்க ஏதுவாகி, தனக்கென ஒரு தனியுரு தவிர்த்து தாமே அனைத்துமாய் இருப்பதுவே மிதந்துசெல்லும் இம்மேகம்


Another text. Another text. Another text. Another text. Another text. Another text. Another text.



Wednesday, January 18, 2006
MOTIVATION

விட்டமின்றி வட்டமடிப்பேன் 
விடுபடு திசைவேகத்தில் 
விண்ணை நோக்கி 


உழைப்பை சிந்தி வை 
உற்பத்தி வியர்வை தானெனினும் 
உறக்கமாவது கிட்டும். 


நிதர்சனம் மீறிய நினைவுகள் 
என்றாகிலும் நிறைவேற வேண்டுமெனில் 
சங்கடங்கள் இன்றே 
சந்தித்தாகப்பட வேண்டும் 
இனி- 
சாற்றப்பட்ட கதவுகளின் 
தாழ் நீக்கததிற்கு 
கால் கடுக்க அவசியமில்லை 
துருப்பிடித்த அக் கதவுகள் 
எக்காலத்திற்கும் தேவையில்லை 
வசந்தத்திற்கு வழிவிடும் 
வாயில்களை நீ அமைத்தது 
சாவிக் கொத்தை உன் வசமாக்கு


Posted at 01:34 pm by passingcloud
Make a comment  




Friday, January 13, 2006
My Society

கம்புகொண்டு நடக்கிறான் கயிற்றின்மேல் 
விழாது இருக்க... 
வயிற்றின்மேல் ஈரத்துணி 


கருவறையோ, 
கல்லறையோ 
என்ன வித்தியாசம் காணும் 
கருவிலேயே உரு தெரியாமல் 
கருகிப்போகும் பட்டிக்காட்டுப் 
பெண் சிசு? 


சுகப்பிரசவத்தில் 
ஊனமாய் 
பிறந்த குழந்தை

 

மூலவர் 
உட்பிரகாரம், உள்ளே 
கம்பீரமாய் அமர்ந்திருந்தார் 
அன்றைய உபயதாரர்


Posted at 09:54 am by passingcloud
Make a comment  

Ullam

எந்தைக்கு ஆயிரம் அலுவல்கள் 
குடும்பத்தை நினைக்க நேரமில்லை. 
அன்னைக்கு இலட்சம் கவலைகள் 
தன்னை நினைக்க நேரமில்லை. 
எனக்கோ கோடி கனவுகள் 
விடியலை நினைக்க நேரமில்லை. 

பிறந்த கடன் 
வட்டிக்கு 
வகையில்லாத 
பொழுதும் 
வாங்குதல் 
தொடருது... 

ஆர்ப்பரிக்கும் ஆசைகளில் 
அரும்பாக அல்லாடுகிறேன் 
அந்தமின்றி......... 

சொந்த(ம்,) ஊர் 
ஒவ்வொருமுறை விட்டுப் பிரியும் போதும் 
என் எடையளவு கணக்கிறது மனது


Posted at 09:48 am by passingcloud
Comment (1)  




Monday, January 09, 2006
Prayer

வேண்டுதல் 
வாழ்வி லெதுவும் 
எஞ்சியும் மிஞ்சாது 
போயினும் அஞ்சாத 
நெஞ்சகத் துடனே 
எவரிடமும் கெஞ்சாத 
நிலை வேண்டும்
 


Posted at 08:55 pm by passingcloud
Make a comment  




Sunday, January 01, 2006
Happy New Year 2006

Revolves the Earth

Flows the River

Blows the Air

Floats the Universe

Shines the Sun

 

Everything is perfect on its way

So would everyone of us

 

Let's

Endeavor to endow

Act and accomplish social welfare

Share the happiness; Worry the worries

Realize the reality; Live upto the satisfaction

 

புத்தாண்டு நல்வாழ்த்து 
சுற்றும் பூமி சுற்றிக் கொண்டே 
ஓடும் நதி ஓடிக் கொண்டே 
வீசும் காற்று படர்ந்து கொண்டே 
மிதக்கும் சராசரம் மிதந்து கொண்டே 
ஒளிரும் சூரியன் தகித்துக் கொண்டே 

அனைத்ததும் அதனதன் வழியில் 
அழகாய் இயங்கிட நாம் 

அனைவரும் அவரவர் வழியில் 
அவசியததை அறிந்து ஆற்றி 
இயன்றதை முனைந்து வழங்கி 
இன்பம் பகிர்ந்து, துன்பம் கலைந்தது 
இயல்பை உணர்ந்து மனதார வாழ்வோம்

 


Posted at 10:12 am by passingcloud
Make a comment  

1st Day of 2005

After their visit to our home in my village, Grandpa, Grandma were returning to Thiruvenkata nagar, It was an afternoon, I hardly remember others accompanied with them and the year of this event. As I was carried over by my Mom I started whimpering, eyes were filled with tears. Finally my Mom managed to cheer me up before that evening. I was a child then.

Today 1st Jan 2006, I’m remembering the same day of the year 2005, I am at my 25th year, at this age I am able to interpret the happenings around me in positive ways and matured too. That day I cried out once again for my Grandpa. Having his memories in mind I was crying for me and for my Grandma. This time I was in Thiruvenkata nagar mourning his death.

I realized the power, the pain of love after the farewell(at college hostel) day. I  strongly felt the sadness.


All the Good things for which I became/become/will become the cause are dedicated to my Thaththa(grandfather), Ammamma(Grandmother) and Aththai(Aunty-Father’s sister).


Posted at 05:00 am by passingcloud
Make a comment  




Tuesday, December 27, 2005
First Circle

Matha:
She is a house wife, Struggled a lot to see her four children in a good position. My lifetime wouldn't be enough to pay even the interest for this life loan.
Pitha:
He is a retired VAO(Village Administrative Officer), now involved in farming. He has given me enough freedom, & he never intruded in my interests. Thought me to enjoy the pleasure of each and every small things which happens around me.
Guru:
Subbu Sir, Who thought me C, C++, UNIX . Today I am into the IT field, He is reason behind that. He personally takes care of my career.
Theivam:
Thaththa, Ammamma & Aththai.


Posted at 10:53 pm by passingcloud
Make a comment  




Monday, December 26, 2005
Samarpanam

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு - எனக்கு மூலமே 
என் தாத்தா பாட்டி அத்தை உறவு


Posted at 11:53 pm by passingcloud
Make a comment  




Previous Page Next Page

passingcloud
April 11th 1980  (Age 29)
Male
Tiruchirapalli







<< June 2009 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03 04 05 06
07 08 09 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30






Contact Me

If you want to be updated on this weblog Enter your email here:




rss feed