Friday, September 15, 2006
கடற்கரை (VGP Golden Beach)
அருகே நிற்கும் சிறுவன்
சற்றுமுன் வீசி எறிந்த
அனைத்தையும் அள்ளிக்கொண்டு
வந்தது அடுத்த அலை
என்றோ எவரோ விட்டுச்சென்றவைகளும்
அடுத்தடுத்த அலை பிடித்து
வந்து கொண்டேயிருக்கின்றன
விழுந்த கணம் உணர்ந்தது முதல்
அலை நோக்கியே நானும்...
கரை ஒதுங்குமா என் கற்பனைகளும்?
Posted at 02:51 pm by
passingcloud