தொடர் சொற்பொழிவு
வேகமாய் அரட்டை -
கருத்தின்றி பிறர்மனம் வருத்தி,
தொடரும் வரையில் மகிழ்வாய்,
முடிந்த பின்னால் எப்பொழுதும்
நெருடலாய்... ஏதோவொரு பதைப்பு
தற்கொலை
கோழையின்
தைரியச் செயல்
முழுநீள கவிதை
நீளமானதும், ஆழம் போனது
ஆதலினால்
அநாவசியமாய்ப் பட்டது
அடுத்த வரியின் தேவை.
குளிர் தடுக்கவும் இயலாமல்
வெப்பம் பிடிக்கவும் முடியாமல்
சுள்ளிகளோடு தினம்
வெந்து சாம்பலாய் போகுதென்
மார்கழி தினங்களனைத்தும்