ஆற்று மீன்கள் அடுப்பில் கொதிக்க,
கல்லணை போய்வந்த கையோடு
அவசரமாய் தீனி பெட்டி
வாங்க ஓடினேன்...
வீட்டுக் கண்ணாடி தொட்டியில்
நீரளவு பார்த்துக் கொண்டிருக்கும்
வண்ண சிற்றுயிர்களுக்கு...
இரண்டு நாட்கள்
எவரும் இல்லாது போனால்
மிதந்து போகுமிதன் மீதான கரிசனம்,
தொடர்ந்து நீந்திப்போகும் அதற்கு
தூண்டில் போடுகையில்
நாக்கிளிப் புழுவாய் போனதுவே!
Posted at 09:56 am by
passingcloud